Call us: 9489832921
e-mail: diawinhealthcare@gmail.com
Head office: Tirunelveli
DIAWIN ENT

Best Siddha treatment for Ear, Nose and Throat infections

There is no doubt that the 5 senses of seeing, hearing, consuming, tasting and perceiving are important to human. In this, the senses of hearing, consumption and taste are interrelated. One affects but the other affects.

Many peoples don’t care about to ear, nose and throat problems. So many people are exposed to the disease.

Dislocation of the nasal membrane,
Nose valve contraction and dilation,
Obstruction of the nose and throat
Etc., causing swelling and irritation of the mucous membrane on the inside of the nose and secretion of water.

Diawin siddha hospital provide best ENT treatment an effective traditional medicines.

காது ,மூக்கு , தொண்டை பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவ தீர்வுகள்

பார்த்தல், கேட்டல், நுகர்தல், சுவைத்தல், உணர்தல் ஆகிய 5 புலன்களும் மனிதனுக்கு முக்கியமானவை என்பதில் ஐயமில்லை. இதில், கேட்டல், நுகர்தல், சுவைத்தல் ஆகிய புலன்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. ஒன்று பாதித்தாலும் மற்றவை பாதிக்கும். ஆனால் இதைப்பற்றிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படவில்லை என்றே சொல்ல வேண்டும்.

காது, மூக்கு, தொண்டையில் ஏற்படும் பிரச்சினைகளை நாம் குறிப்பாக கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை. அதனால் நோய் தாக்குதலுக்கு ஆளானோர் பலர். மூக்கு சவ்வு விலகுதல், மூக்கின் சில்லு தள்ளி இருத்தல், மூக்கின் வால்வு சுருங்கி விரிதல், மூக்கு, தொண்டை பகுதியில் அடைப்பு ஏற்படுதல் போன்றவைகளால், மூக்கின் உட்பகுதியில் உள்ள மெல்லிய சவ்வில் வீக்கம், மற்றும் எரிச்சல் ஏற்பட்டு நீர் சுரக்கும்.

இதனால் மூக்கடைப்பு ஏற்படும். அதன்பிறகு கண், காது, மூக்கு, தொண்டை இவற்றை பாதித்து அதிகமாக நீர் சுரக்கும். இதுதவிர சிலருக்கு மூச்சிரைப்பு, வாசனைகளை அறிய முடியாமை, காதடைப்பு, ‘சைனஸ்‘ போன்ற பிரச்சினைகள் ஏற்படும். பொதுவாக வைரஸ் கிருமிகளால் ஏற்படும் சளி தொல்லை ஒரு வாரத்துக்குள் சரி ஆகிவிடும். அதற்கு மேல் பிரச்சினை நீடித்தால் கண்டிப்பாக டாக்டரை அணுக வேண்டும்.

அதேபோல் தூசி, ஒட்டடைகள் அண்டாதவாறு, வீட்டை முடிந்தவரை சுத்தமாக வைத்துக்கொள்வது நல்லது.பனிக்காலத்திலும், 70 சதவீதம் வைரஸ் கிருமி தொற்றால் தொண்டை கட்டுதல் ஏற்படுகிறது. அப்போது நிறைய நீராகாரங்களை அருந்த வேண்டும். உப்பு போட்டு வாய் கொப்பளிக்கலாம். தேன் கலந்து எலுமிச்சை சாறு அருந்தலாம்.

தொண்டையில் கரகரப்பு ஏற்படுவதற்கு சளி, கட்டி வளர்ச்சி, வயிற்றில் அமிலம் சுரத்தல் ஆகியவை காரணமாக இருக்கும். குரல்வளை சரியாக இயங்காமல் போனாலும் கரகரப்பு ஏற்படலாம்.

பொதுவாக, காதுகளை அடிக்கடி ‘பட்ஸ்‘ மற்றும் குச்சி கொண்டு சுத்தம் செய்வது கூடாது, காதுகளில் எண்ணெய் ஊற்றக்கூடாது, காதுகளுக்கு பலமான சத்தம் ஆகாது, விபத்துகளில் காதுகளில் அடிபடக்கூடாது.அவ்வாறு அடிபட்டால் காதுகளுக்குள் உள்ள சவ்வு கிழிந்து சீழ் பிடித்து விடும். அம்மைகட்டு, காது நரம்புகள் பலவீனம் அடைதல் போன்றவற்றால் காதின் நடுச்செவியில் நீர்க்கோர்வை ஏற்படும்.

அடுக்கடி சளிப்பிடித்தல், தும்மல், வாசனைகளை அறிய முடியாத நிலை, அடிக்கடி தலைவலி போன்றவை ‘சைனஸ்’ நோயின் அறிகுறி. தொண்டையை பொறுத்தவரை, வலி, மூச்சு விடுவதில் சிரமம், உணவை முழுங்க முடியாத நிலை ஏற்பட்டால் ‘டான்சில்’எனப்படும் தொண்டை கட்டி ஏற்பட்டுள்ளதும் காரணமாக இருக்கலாம். அதனை கண்டறிய வேண்டும்.

குழந்தைகளை பொறுத்தவரை அதிகமாக குளிர் பானங்கள் குடித்தல், ஐஸ்கிரீம் சாப்பிடுதல், சுகாதாரமற்ற தண்ணீரை குடித்தல் போன்றவற்றால் தொண்டைகளில் பிரச்சினைகள் ஏற்படும். பெரியவர்களுக்கு, புகை பிடித்தல், மது அருந்துதலால் தொண்டையில் புற்றுநோய் தாக்கக்கூடும்.