Call us: 9489832921
e-mail: diawinhealthcare@gmail.com
Head office: Tirunelveli
DIawin liver

Best siddha Liver treatment

Cirrhosis is a late stage of scarring (fibrosis) of the liver caused by many forms of liver diseases and conditions, such as hepatitis and chronic alcoholism.

Symptoms of acute liver diseas

Yellowing of your skin and eyeballs (jaundice)
Pain in your upper right abdomen.
Abdominal swelling (ascites)
Nausea.
Vomiting.
A general sense of feeling unwell (malaise)
Body tire.

மஞ்சள் காமாலை மற்றும் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளை குணப்படுத்த முடியுமா?

நம் டயாவின் சித்த மருத்துவமனையில் மஞ்சள் காமாலை, கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் அழற்சிபோன்ற கல்லீரல் சார்ந்த நோய்களை சித்த மருத்துவ சிகிச்சையின் மூலம் குணப்படுத்தலாம். மேலும் உணவுக்கட்டுப்பாடு மற்றும் மதுபழக்கத்தை தவிர்ப்பது நல்லது. மருத்துவ ஆலோசனைக்கு

கல்லீரல் வீக்கம்
குடிப்பழக்கம், நுண்ணுயிரிகள் மற்றும் மாசு நீர் போன்ற காரணங்களால் கல்லீரல் வீக்கம் ஏற்படலாம். கல்லீரல் வீக்கம் இருப்பவர்களுக்கு சிறுநீரக கல் பிரச்சனை வர வாய்ப்புள்ளது.

கல்லீரல் அழற்சி:

பெரும்பாலும் மது அருந்துவதால் கல்லீரல் பாதிக்கப்பட்டு இப்பிரச்சனை ஏற்படுகிறது. இது நுண்ணுயிரிகளினாலும், மது போன்ற ஆபத்தான பொருட்களினால் கல்லீரல் பாதிக்கப்படுவதாலும் ஏற்படலாம். அறிகுறிகளே இன்றியும் அல்லது குறைந்த அறிகுறிகளுடனும் இது காணப்படும். ஆனால் பெரும்பாலும் மஞ்சள் காமாலை, பசியின்மை, உடல்சோர்வு ஆகியவற்றை உண்டாக்கும்.

கல்லீரல் பிரச்சனைகளுக்கான அறிகுறிகள்:

நம் உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு.
உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் கல்லீரல் தான். உடலில் சேரும் டாக்ஸின்களை (கழிவுகளை) வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது போன்ற பணிகள் குறிப்பிடத்தக்கது. கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும்.

கால்களில் வீக்கம்
ஒருவருக்கு கல்லீரல் சரியாக செயல்படாமல் இருந்தால், கால்களில் லேசாக வீக்கம் ஏற்படும். கால்கள் வீங்கியிருந்தால், உடனே மருத்துவரை சந்திக்கவும்.

மஞ்சள் காமாலை
எப்போது ஒருவரின் சருமம் மற்றும் கண்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கிறதோ, அத்தகையவருக்கு மஞ்சள் காமாலை காரணமாக பித்தநீர் தேங்கியுள்ளது என்று அர்த்தம்.

வயிற்று உப்புசம் மற்றும் வலி
கல்லீரலில் கட்டி விரைவில் வராது. ஆனால் கல்லீரலானது தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் தான், கல்லீரலில் கட்டிகள் உருவாகும். உங்கள் கல்லீரலில் கட்டிகள் இருந்தால், வலது பக்கத்தில் அடிவயிற்றிற்கு சற்று மேலே வலி எடுப்பதோடு, வயிறு உப்புசத்துடனும் இருக்கும். செரிமானக்கோளாறுகள் மற்றும் பசியின்மை போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

வாந்தி, சோர்வு, காய்ச்சல்
கல்லீரலை வைரஸ் தாக்கினால் உருவாவது தான் ஹெபடைடிஸ் என்னும் கல்லீரல் அழற்சி. உங்களுக்கு கல்லீரல் அழற்சி இருந்தால், வாந்தி, சோர்வு, காய்ச்சல், மயக்கம், குளிர் போன்றவை வரக்கூடும்.

தலைச்சுற்றல்
ஆல்கஹால் குடிப்பவராக இருந்தால், விரைவில் கல்லீரல் பாதிக்கப்படும். ஆல்கஹால் அதிகம் பருகி கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், தலைச்சுற்றல் மற்றும் குழப்பம் அடிக்கடி ஏற்படும்.

குமட்டல்
கல்லீரல் சரியாக இயங்காமல் இருப்பின், குமட்டலை சந்திக்கக்கூடும். எனவே உங்களுக்கு அவ்வப்போது குமட்டல் ஏற்பட்டால், உடனே மருத்துவரை சந்தியுங்கள்.

உடல் சோர்வு
நாள்பட்ட உடல் சோர்வு கூட கல்லீரல் பிரச்சனைக்கான அறிகுறியே. ஆகவே உங்களுக்கு அடிக்கடி சோர்வு ஏற்பட்டால், மருத்துவரை சந்தித்து முறையான பரிசோதனையை மேற்கொண்டு, சரியான காரணத்தைக் கண்டறியுங்கள்.