முடக்கு வாதம் என்பது ஒரு வகை மூட்டு வலியாகும். இது பொதுவாக முழங்கால்களில் ஏற்படுகிறது. இது ஒரு வித நாள்பட்ட அழற்சியை ஏற்படுத்தக் கூடியது. இது மூட்டுகளில் வீக்கத்தையும் அழற்சியையும் ஏற்படுத்துகிறது. இந்த முடக்கு வாதத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து விட்டால் அதை எளிதாக குணப்படுத்தலாம்.
முடக்கு வாதம் என்பது ஒரு நபரின் நோயெதிர்ப்பு அமைப்பு ஆரோக்கியமான உடல் திசுக்களைத் தாக்கும்போது ஏற்படும் ஒரு தன்னுடல் தாக்க நிலையாகும். இது மூட்டுகளில் வீக்கம் மற்றும் வலியை ஏற்படுத்துகிறது. முடக்கு வாதத்தின் பொதுவான அறிகுறிகளாவன, இது கைகள், மணிக்கட்டுகள் மற்றும் கால்களை பாதிக்கிறது. இது கடுமையான சந்தர்ப்பங்களில் தோல், கண்கள், நுரையீரல், இதயம் மற்றும் இரத்த நாளங்களைக் கூட சேதப்படுத்தும்.
முடக்கு வாதத்தின் அறிகுறிகள்..
எடை இழப்பு
எடை இழப்பு முடக்கு வாதத்தின் ஆரம்ப அறிகுறியாக கருதப்படுகிறது. இது திசுக்களின் மீது தாக்குதல் காரணமாக அழற்சியை ஏற்படுத்துகிறது. இதனால் நீங்கள் சோர்வாகவும், காய்ச்சலாகவும் உணர்ந்து பசியை இழந்து இறுதியில் எடை குறைய ஆரம்பிக்கும்.
மூட்டு விறைப்பு
ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்களுக்கு பிறகு உங்க மூட்டுகளில் நீங்கள் விறைப்புத்தன்மையை காண நேரிடலாம். நாள் முழுவதும் மூட்டு விறைப்பு தோன்றலாம். மணிக்கட்டுகள், முழங்கால்கள் மற்றும் பாதங்களில் நீங்கள் இறுக்கத்தை உணர நேரிடலாம். இந்த விறைப்பு சிறிது நேரத்திற்கு பிறகு தானாகவே போய்விடும். சில சமயங்களில் காலப்போக்கில் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
உணர்வின்மை மற்றும் கூச்ச உணர்வு
திசுக்களில் ஏற்படும் வீக்கம் உங்க நரம்புகளில் அதிக அழுத்தத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இது காலப்போக்கில் உங்கள் கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு மற்றும் மென்மைக்கு வழிவகுக்கும். உங்க மூட்டுகளை நீங்கள் அழுத்தும் போது மென்மையான உணர்வை பெறலாம். ஒரு பொருளை ஒரு இடத்தில் இருந்து நகர்த்துவது, நடப்பது மற்றும் அடிப்படை வேலைகளை செய்வது கூட கஷ்டமாக இருக்கும்.
மூட்டுகள் சிவந்து போதல்
முடக்கு வாதத்தின் ஆரம்ப கட்டத்தில் ஒரு நபர் மணிக்கட்டை முன்னும் பின்னுமாக நகர்த்துவதில் சிரமப்படுவார். இதற்கு நீங்கள் பயிற்சிகளை செய்து வரலாம். காலப்போக்கில் நோய் பாதிப்பு அதிகமாகி தசைநார்கள் சேதமடைய தொடங்கும். தசைநார்களை வளைத்து நேராக்குவது கடினமாகும்.
முடக்கு வாதம் மூட்டுகளை சிவப்பாக மாற்றும். உண்மையில் இது திசுக்களை வீக்கமடைய செய்து அதற்கு சிவப்பு தோற்றத்தை அளிக்கும். கைகள் மற்றும் கால்களில் உள்ள மூட்டுகளைச் சுற்றியுள்ள தோலின் நிறமாற்றமும் பொதுவானது.
Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com