புற்றுநோய் என்றால் என்ன?
உடலில் உள்ள செல்களின் இயல்புக்கு மாறான அதீத வளர்ச்சியும் அதனால், அதைச் சுற்றியுள்ள திசுக்களும் உறுப்புகளும் பாதிக்கப்படுவதே புற்றுநோய். இது உடலின் மற்ற உறுப்புகளுக்கும் பரவி பாதிக்கச்செய்கிறது. இது மரணத்தை விளைவிக்கக்கூடிய மிகவும் கொடிய நோய். உடலில் எங்கு வேண்டுமானாலும் இந்த நோய் வரலாம்.
புற்றுநோய் வகைகள் & அதிகம் பாதிக்கக்கூடிய உடல் உறுப்புக்கள்:-
வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய், குடல் புற்றுநோய், ஆசனவாய்ப் புற்றுநோய்
ஆண்களுக்கு இரைப்பை, நுரையீரல், ஈரல், பெருங்குடல்-மலக் குடல், உணவுப் பாதை, வாயின் மேல் தொண்டை, புராஸ்டேட் சுரப்பிகளில் இந்நோய் அதிகமாகத் தாக்குகிறது.
பெண்களுக்கு மார்பு, இரைப்பை, பெருங்குடல்-மலக் குடல், கர்ப்பப் பை, உணவுப் பாதை, கல்லீரல் ஆகிய இடங்களில் புற்றுநோயின் தாக்கம் அதிகமாகக் காணப் படுகிறது.
புற்றுநோய்க்கான காரணம்:-
புற்றுநோய் மரபு வழி நோய். புகையிலை, கூரையாக வேயப்படும் ஆஸ்பெஸ்டாஸ், ஆர்சனிக் உலோகம், கதிர்வீச்சு, மித மிஞ்சிய சூரியக் கதிர் வீச்சு, வாகனங்களில் இருந்து வெளிப்படும் புகை போன்ற பல வேதியியல் காரணிகளாலும் இந்நோய் பரவுகிறது.
மனிதர்களுக்கு வரும் புற்றுநோய்களுக்கு 80 – 90 சதவீதம் சுற்றுச்சூழல் காரணமாக இருக்கிறது.
அத்துடன் உலகில் சிகரெட், பீடி, பான்பராக் மற்றும் புகையிலைப் பொருட்கள் போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்தப்படுகின்றன. இதனால் வாய், நுரையீரல், தொண்டைக் குழி, மூச்சுக் குழல், உணவுப் பாதை, சிறுநீர்ப் பை, கணையம், சிறுநீரகம் ஆகிய பகுதிகளில் உள்ள செல்கள் பாதிக்கப்பட்டுப் புற்றுநோய் உண்டாகிறது.
அதிகப்படியாக மதுபானங்களைக் குடிப்பது கல்லீரல் மற்றும் உணவுப் பாதை ஆகியவற்றில் புற்றுநோய் வரக் காரணமாக அமைகிறது.
தவறான உணவுப் பழக்கம், நார்ச்சத்துள்ள உணவை உட்கொள்ளாதது குடலில் புற்றுநோய் ஏற்படக் காரணமாக இருக்கிறது. உப்புக்கண்டம் போன்ற பதப்படுத்திய இறைச்சி, உணவுப் பொருட்களை உண்பது இரைப்பை புற்றுநோய்க்குக் காரணமாக இருக்கின்றன.
புற்றுநோய்க்கான அறிகுறிகள்:-
உடலில் ஏதாவது ஒரு இடத்தில் கட்டி ஏற்படுகிறது என்றால் அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. கட்டி எதனால் வந்தது, ஏதும் பாதிப்பு உண்டா என்பதை மருத்துவரிடம் சென்று காட்ட வேண்டும்.
பசியின்மை, திடீர் எடையிழப்பு, ஜீரணக் கோளாறு ஏற்பட்டு வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் ஆகியவை ஏற்பட்டால் மருத்துவரைப் பார்ப்பது நல்லது. இந்த அறிகுறிகள் புற்றுநோய் வந்ததற்கான அறிகுறிகள் என்று தவறாக எண்ண வேண்டாம். இதை ஒரு எச்சரிக்கையாகக் கருதி மருத்துவ ஆலோசனை செய்ய வேண்டும்.
புற்றுநோயை தடுக்கலாம்:-
புற்றுநோய் வந்தால் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைத்து மன உளைச்சலுக்கு ஆளாக தேவையில்லை, மன உறுதியும் முறையான சிகிச்சையும் மேற்கொண்டால் புற்றுநோயை வெல்லலாம். அதைவிட நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிவது மிகமிக முக்கியம்.
மேலும் விபரங்களுக்கு..
Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
https://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com
Tirunelveli – Chennai – Madurai – Tirupur – Hosur – Thanjavur