இந்த வார்த்தை கிரேக்க மொழியிலிருந்து வந்தது. ஆர்த்ரோ என்றால் மூட்டு என்று பொருள். ட்டிஸ் என்றால் நீர்மகார்த்தல் என்று பொருள். ஆர்த்தரைட்டிஸ் என்பது மூட்டுக்கள் சம்பந்தமான ஒரு நோய். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுக்களில் நீர்கோர்ப்பதால் வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக அறிந்திருக்கின்றனர். அவற்றில் அதிகம் காணப்படுபவை:
ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் – மூட்டு தேய்மானம்.
ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்- சரவாங்கி.
சொரியாடிக் ஆர்த்தரைடிஸ்-தோல் நோயுடன் சேர்ந்த முடக்குவாதம்.
கவுட்-யூரிக் அமிலம் போன்றவற்றால் படிகங்கள் உருவாகி, அதனால் வலி வரல்.
செப்டிக் ஆர்த்தரைட்டிஸ்-அடிபடுவதால் வருவது.
மூட்டுவலி மற்றும் ஆர்த்தரைட்டிஸ்
நோய்க்கான காரணங்கள்:
- மூட்டுக்களில் நீர்கோர்த்தல் (ருமாட்டாய்டு போல).
- மூட்டுகள் சிதைந்து போதல் (விபத்து, வேலைப்பளு காரணமாக).
- தேய்ந்து போதல் (வயது காரணமாக).
- படிகங்கள் உருவாதல் (கவுட் போல).
- உடல் சோர்ந்து போதல்.
- உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் அல்லது ஆட்டோ இம்யூன் காரணமாக (உடலில் பாதுகாப்பு இயக்கமான நோய் எதிர்ப்பு சக்தியே உடலுக்கு எதிராகச் செயல்படுவது).
- நோய்த் தொற்று – (செப்டிக் ஆர்த்தரைட்டிஸ் போல).
- கொலோஜன் வாஸ்குலர் டிஸ்ஆர்டர் (“லுப்ஸ் எருத்மேட்டிஸ்” போல).
வாத நோய்க்கான அறிகுறிகள்:
- மூட்டுக்களில் வலி.
- மூட்டுக்களில் வீக்கம்.
- மூட்டுக்களில் இறுக்கம்.
- மூட்டுக்களைச் சுற்றிலும் வலி.
- லூப்பஸ் மற்றும் டுமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ், பிறஉறுப்புகளையும் பாதிக்கும். அதனால் நடக்க முடியாமல் போதல்.
- பொருட்களைக் கையால் பிடிக்க முடியாமை.
- உடல்வலி, சோர்வு.
- எடை குறைதல்.
- தூக்கமின்மை.
- தசைகளில் வலி.
- மூட்டுகள் மென்மையாகிப் போதல் (தொட்டாலே வலிக்கும்).
- மூட்டுக்களை மடக்குவதில், அசைப்பதில் சிரமம். ஆர்த்தரைட்டிஸ் நோய் மிகத்தீவிரமடையும் போது, உடலின் எல்லா இயக்கங்களும் குறைந்து, உடல் எடை கூடுதல், கெட்ட கொழுப்புச் சத்தின் அளவு அதிகமாதல், இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாதல், பிற உடலுறுப்புக்கள் சேதமாதல் ஆகியன நேரலாம்.
டயாவின் சித்த மருத்துவமனையில் Arthritis Treatments அதாவது வாதநோய் சித்த மருத்துவ முறையில் நாங்கள் குணப்படுத்திக்கிறோம்….
இதுவரை நீங்கள் கண்டிராத மூலிகை மருந்துகள் மூலம் சிகிச்சையினை நாங்கள் தருகின்றோம்.