Call us: 9489832921
e-mail: diawinhealthcare@gmail.com
Head office: Tirunelveli

நீரிழிவு நோய் பற்றிய விளக்கம்

நம் உடலில் உள்ள திசுக்களில் தேவையான சக்தியை, இரத்தத் தில் உள்ள குளுக்கோஸ் கொடுக்கிறது. இருப்பினும் குளுக்கோஸை திசுக்களில் செலுத்த இன்சுலின் என்ற ஹார்மோன் தேவைப்படுகிறது. வயிற்றின் பின் பகுதியில் கணையம் என்னும் சுரப்பி உள்ளது.இங்கு இருந்து தான் இன்சுலின் உற்பத்தியாகிறது. இன்சுலின் அளவு குறையும்போது, உடலில் உள்ள திசுகளுக்கு தேவையான குளுக்கோஸை இரத்தத்தில் இருந்து பெற முடிவதில்லை.இதனால் இரத்த ஓட்டத்தில் சக்கரையின் அளவு அதிகமாகிறது.

இரத்த ஓட்டத்தில் சேரும் அதிகப்படியான சக்கரையானது இதயம், சிறு நீரகங்கள், கண்கள், மற்றும் நரம்பு மண்டலம் மற்றும் இரத்த நாளங்களை பாதிக்கிறது.சரியான முறையில் மருத்துவர் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்காமல் இருந்தால் மோசமான விளைவுகளுக்கு ஆளாகி விடுவோம். சில சமயங்களில் மரணத்திலும் முடியலாம். இரத்த சக்கரையின்(Diabetes) அளவை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள், மேலே குறிப்பிட்டுள்ள உபாதைகளினால் பாதிக்காமல் தங்களை காத்துக் கொள்ள முடியும்.

சரியான முறையில் கவனம் செலுத்தினால் நீரிழிவு நோய் இருந்தாலும் சராசரியான, திருப்திகரமான வாழ்க்கையை நடத்தலாம். அதிகப்படியான கவனத்துடன் சுயகட்டுப்பாடுடன் வாழ வேண்டும். சுய கட்டுப்பாடு என்பது சரியான உணவை தினம் தோறும் உட்கொள்வது, உடற்பயிற்சி செய்தல், உடலில் அதிகப்படியான எடையை குறைத்தல், இரத்தப் பரிசோதனைகளை சரியான கால கட்டங்களில் செய்தல், மருத்துவர் ஆலோசனைப்படி மருந்துக்களை உட்கொள்வது.

சைனஸ் அவஸ்தையா? – இயற்கை மருத்துவத்தில் தீர்வு

மூக்கில் ஒவ்வாமையை உண்டாக்கி தும்மல் வருவது எப்போதாவது உண்டு. ஆனால் தொடர்ந்து அடுக்குத்தும்மலால் அவதிப்பட்டால்…மூக்கில் நீர்வடிவதும், தாங்கமாட்டாத தலை வலியும் தொடர்ந்து வரும் தும்மலும் சைனஸ் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகளாக சொல்லலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் இந்த பாதிப்பு உண்டாககூடும்.

இந்த நேரத்தில் மூக்கில் தூசி போகாமல் பார்த்துகொண்டாலே விரைவில் சரி செய்யமுடியும். கூடும் என்பதால் உரிய நேரத்தில் தாமதமில்லாமல் சிகிச்சை செய்துகொள்வது அவசியம்.மூக்கைச் சுற்றி பக்கத்திற்கு 4 என்று இரண்டு பக்கமும் சேர்த்து 8 காற்றுப்பைகள் உண்டு. கண்ணுக்கும் மூக்கும் இடைப்பட்ட கன்னம், மூக்கு, நெற்றி போன்றவை இணையும் இடத்தில் அமைந்திருக்கும் காற்றுபைகள் நாம் சுவாசிக்கும் காற்றை சுவாச மண்டலத்துக்கு எடுத்துசெல்லும் இந்த காற்றுபைகள் தான் சைனஸ் என்று அழைக்கிறோம்.சைனஸ் அறைகளில் ஏதாவது ஒரு அறையில் நீரோ சளியோ தங்கிய பிறகு அந்த அறைகளின் வாசல் அடைக்கப்படுகிறது. இதுதான் சைனஸ் பாதிப்பு என்று சொல்லப்படுகிறது. இவர்களுக்கு எப்போதும் தூசு, புகை, பூ, காற்றில் மாசு போன்றவை அலர்ஜிதான்.

நாசி ஒவ்வாமை உள்ளவர்களுக்கு அடுக்கு தும்மல், தும்மல் அடுக்கடுக்காய் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கும். அப்போது தலைவலியும் பாரமும் சேர்ந்து இருக்கும். மூக்கின் உள் பகுதியான மியூக்கோஸ் படலம் மிருதுவானது இதன் அடுக்கு வீங்கி மூக்குதுவாரம் சிறியதாக ஆகிவிடும்.அதனால் மூக்கடைப்பு, மூக்கில் நீர் வடிதல், தலைவலி போன்றவை உண்டாகும். வாசனை உணர்வு குறையும். கன்னம், நெற்றி பகுதிகளை தொட்டாலே வலிக்கும்.

மேலும் இதை பற்றிய இலவச மருத்துவ ஆலோசனைக்கு டயாவின் சித்த மருத்துவமனையை அணுகுங்கள்.

தொடர்புக்கு

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com

‘ஆர்த்தரைட்டிஸ்’ நோயை இயற்கை முறையில் குணப்படுத்த – Diawin Siddha Hospital

ஆர்த்ரோ என்றால் மூட்டு என்று பொருள். ட்டிஸ் என்றால் நீர்மகார்த்தல் என்று பொருள். ஆர்த்தரைட்டிஸ் என்பது மூட்டுக்கள் சம்பந்தமான ஒரு நோய். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட மூட்டுக்களில் நீர்கோர்ப்பதால் வருகிறது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் இருப்பதாக அறிந்திருக்கின்றனர். அவற்றில் அதிகம் காணப்படுபவை:

ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ் – மூட்டு தேய்மானம்.

ருமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ்- சரவாங்கி.

சொரியாடிக் ஆர்த்தரைடிஸ்-தோல் நோயுடன் சேர்ந்த முடக்குவாதம்.

கவுட்-யூரிக் அமிலம் போன்றவற்றால் படிகங்கள் உருவாகி, அதனால் வலி வரல்.

செப்டிக் ஆர்த்தரைட்டிஸ்-அடிபடுவதால் வருவது.

மூட்டுவலி மற்றும் ஆர்த்தரைட்டிஸ்

நோய்க்கான காரணங்கள்:

 • மூட்டுக்களில் நீர்கோர்த்தல் (ருமாட்டாய்டு போல).
 • மூட்டுகள் சிதைந்து போதல் (விபத்து, வேலைப்பளு காரணமாக).
 • தேய்ந்து போதல் (வயது காரணமாக).
 • படிகங்கள் உருவாதல் (கவுட் போல).
 • உடல் சோர்ந்து போதல்.
 • உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் அல்லது ஆட்டோ இம்யூன் காரணமாக (உடலில் பாதுகாப்பு இயக்கமான நோய் எதிர்ப்பு சக்தியே உடலுக்கு எதிராகச் செயல்படுவது).
 • நோய்த் தொற்று – (செப்டிக் ஆர்த்தரைட்டிஸ் போல).
 • கொலோஜன் வாஸ்குலர் டிஸ்ஆர்டர் (“லுப்ஸ் எருத்மேட்டிஸ்” போல)

வாத நோய்க்கான அறிகுறிகள்:

 • மூட்டுக்களில் வலி.
 • மூட்டுக்களில் வீக்கம்.
 • மூட்டுக்களில் இறுக்கம்.
 • மூட்டுக்களைச் சுற்றிலும் வலி.
 • லூப்பஸ் மற்றும் டுமாட்டாய்டு ஆர்த்தரைட்டிஸ், பிறஉறுப்புகளையும் பாதிக்கும். அதனால் நடக்க முடியாமல் போதல்.
 • பொருட்களைக் கையால் பிடிக்க முடியாமை.
 • உடல்வலி, சோர்வு.
 • எடை குறைதல்.
 • தூக்கமின்மை.
 • தசைகளில் வலி.
 • மூட்டுகள் மென்மையாகிப் போதல் (தொட்டாலே வலிக்கும்).
 • மூட்டுக்களை மடக்குவதில், அசைப்பதில் சிரமம். ஆர்த்தரைட்டிஸ் நோய் மிகத்தீவிரமடையும் போது, உடலின் எல்லா இயக்கங்களும் குறைந்து, உடல் எடை கூடுதல், கெட்ட கொழுப்புச் சத்தின் அளவு அதிகமாதல், இதயநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாதல், பிற உடலுறுப்புக்கள் சேதமாதல் ஆகியன நேரலாம்.

டயாவின் சித்த மருத்துவமனையில் (Arthritis Treatments) – அனைத்து விதமான இயற்கை முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இலவச மருத்துவ ஆலோசனைக்கு – +91 94898 32921

தொடர்புக்கு

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S

24*7 Support / Appointment:

Free Consultation : +91 94898 32921

Home

Email: diawinhealthcare@gmail.com

கருப்பை நீர்கட்டிகள் PCOD – PCOS குணமாக சித்த மருத்துவம்

கருப்பை நீர்கட்டிகள்

பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு இப்போதெல்லாம் கருப்பை நீர்கட்டி என்னும் கோளாறு ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome)(pcos or pcod) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது. பல நீர் நிரம்பிய கட்டிகள் கர்ப்பபையில் தோன்றுவதன் மூலமாக பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் ஏற்படுகிறது. இது குறிப்பாக குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த கருப்பை நீர்கட்டி உள்ளது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும், கர்ப்பபையில் நீர்கட்டி பிரச்சனைகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.

சினைப்பை நீர் கட்டி வர காரணம்:

ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.

வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் வேலைப்பளுவும், மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.

கருப்பை நீர்கட்டி அறிக்குறிகள் :

இதன் அறிக்குறிகள் ஒருவருக்கொருவர் வேறுபடும். பெரும்பாலானவர்கள் கூறும் ஓரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி.

இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், முடி கொட்டுதல், குரல் வேறுபடுதல், முகத்தில் பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

எந்த உணவு முறையை எடுத்துக் கொள்ளலாம்?

நீர் கட்டி குணமாக கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானிய வகைகள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் நீர்க்கட்டி குணமாக காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

நீர் கட்டி குணமாக முடிந்த அளவு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள்:

மைதா, ரவை, பட்டை தீட்டிய அரிசி, பிராய்லர் கோழி, முட்டை, எண்ணெயில் பொறித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.

உடற்பயிற்சி:

நீர் கட்டி குணமாக காலை, மாலை என்று இரண்டு வேளை நடந்து செல்வது மிகவும் நல்லது. முடிந்தளவு உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்ல முறையாகும்.

டயாவின் சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவ முறையில் நாங்கள், பெண்களுக்கு (சினைப்பை நீர்க்கட்டி PCOS & PCOD) பிரச்சனையால் ஏற்படும் குழந்தையின்மை குறைபாட்டை சரி செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு தொடர்புக்கு

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com

ஆண்மைக்குறைவு ஒரு பொதுவான பிரச்சனையா?

ஆண்மைக்குறைவு என்பது ஆண்களிடையே ஒரு பொதுவான பிரச்சனையாகும், மேலும் இது ஆண்குறி உடலுறவுக்கு போதுமான விறைப்புத்தன்மையை நிலைநிறுத்த இயலாமை அல்லது விந்து வெளியேறும் இயலாமை அல்லது இரண்டும் ஆகும்.

விறைப்புத்தன்மை ஒரு உடல் அல்லது உளவியல் நிலையின் அறிகுறியாக இருக்கலாம். இது மன அழுத்தம், உறவில் விரிசல் மற்றும் குறைந்த தன்னம்பிக்கையால் விரைப்புக்கோளாறுகள் ஏற்படலாம். மற்றும் உடல் சோர்வு, போதைவஸ்துகள் மற்றும் ஹார்மோன்கள் குறைபாட்டினால் ஏற்படலாம்.

முக்கிய அறிகுறி, உடலுறவுக்கு போதுமான விறைப்புத்தன்மையைப் பெறவோ அல்லது ஆங்குறியை உறுதியாக வைத்திருக்கவோ இயலாத ஆண் ஆண்மைக்குறைவு பிரச்சனையால் பாதிக்கப்படுகிறான்.

விறைப்புத் திறனின்மையால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் முதலில் அடிப்படை உடல் மற்றும் உளவியல் நிலைமைகளுக்கு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். விந்து முந்துதல் பிரச்சனைக்கு விந்து நீர்த்துப்போதல் மற்றும் உடல் சூடு காரணமாக இருக்கலாம்.

குணப்படுத்த எவ்வளவு நேரம் ஆகும்?

டயாவின் சித்த மருத்துவமனையில் 40 நாட்களில் சித்த மருத்துவ முறையில் நாங்கள் குணப்படுத்துகிறோம்….

இதுவரை நீங்கள் கண்டிராத மூலிகை மருந்துகள் மூலம் சிகிச்சையினை நாங்கள் தருகின்றோம்.

பக்கவாதம் வந்தால் குணப்படுத்தமுடியுமா?

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 15 மில்லியனுக்கும் அதிகமான பேர்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகிறார்கள்,

இதில் பாதி பேர் பக்கவாதம் தாக்கிய உடனேயே இறந்துவிட்டதாகவும், மீதமுள்ளவர்கள் ஊனமுற்றவர்களாகவும் உள்ளனர். நம்மிடையே ஒரு பொதுவான தவறான கருத்து உள்ளது. ஒரு பக்கவாதம் வயதானவர்களுக்கு அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது, ஆனால் உண்மை என்னவென்றால், பக்கவாதம் இளையவர்களிடமும் ஏற்படலாம்.

உண்மையில் பக்கவாதம் நோய் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது?

ஆக்ஸிஜனுக்காக ஏங்கும் நம் உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே, நமது மூளையும் அதையே செய்கிறது, ஆனால் இரத்த ஓட்டம் அல்லது துல்லியமான ஆக்ஸிஜன் துண்டிக்கப்படும் போது, ​​மருத்துவர்கள் அதை பக்கவாதம், பக்கவாதம், ஹெமிபரேசிஸ் என்று அழைக்கிறார்கள். மூளையின் குறிப்பிடத்தக்க செயல்பாட்டை நாம் அனைவரும் அறிந்திருப்பதால், பல சந்தர்ப்பங்களில் மக்கள் ஏன் ஊனமுற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

மூளையில் ஆக்ஸிஜன் இல்லாத பகுதியைப் பொறுத்து பக்கவாதத்தின் விளைவு நபருக்கு நபர் மாறுபடும். சிலர் முகத்தை சாய்த்துக்கொள்வார்கள், சிலர் நினைவாற்றல் இழப்பில் முடிவடைவார்கள். ஆயினும் கூட, பக்கவாதத்தால் ஏற்படும் பல நிலைமைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும்.

#பக்கவாதம், #முடக்குவாதம், #விரைவாதம், #முதுகுத்தண்டுவட பிரச்சனை மற்றும் #மூட்டுவலி போன்ற, நாள் பட்ட சிரமமான பிரச்சனைகளிலிருந்து விடுபட #டயாவின் சித்த மருத்துவமனை.

சித்த மருத்துவ சிகிச்சை மூலம் 200 க்கும் மேற்பட்டவர்களை குணம் பெற செய்த, சித்த மருத்துவர் #மெல்வின் அவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற.. 94898 32921

தைராய்டு சுரப்பி

இன்றைக்கு அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்னைகளில், தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு உருவெடுத்துள்ளது.

தைராய்டு என்பது நமது உடலின் கழுத்து பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி. இதில் சுரக்கும் ஹார்மொனின் அளவு அதி கமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போதைராய்டிஸம் (Hypothyroidism) என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்பர் தைராய்டிஸம் (Hyperthyroidism) என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தைராய்டு அறிகுறிகள்
தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை குறையும். பிறகு செயல்பாடுகள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அதேநேரத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும்போது, திடீரென உடல் எடை அதிகரிக்கும். ஒருவிதமான எரிச்சல், பதற்றம், இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படுவது இதன் முக்கியமான அறிகுறிகளாகும். குறிப்பாக, பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு, கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்னை என வரிசை கட்டி நிற்கும்.

முறையான சிகிச்சைகள் மற்றும் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் நலம் பெறலாம்.

முடக்கு வாதத்தை முற்றிலும் குணப்படுத்த – சித்த மருத்துவம்

 சிலருக்கு எந்த வேலையும் செய்ய முடியாதநிலையில்  மூட்டுகளில் மட்டும் அதிக வலி இருக்கும். அப்படி நீண்ட நாள்கள் வலி இருந்தால், அதற்கு `ரூமட்டாய்டு முடக்கு வாதம்’ என்று பெயர்.

அதாவது இந்த நோய் வந்தால் பெரும்பாலும் வளையக்கூடிய மூட்டுகளில் உள்ள சதைப் பகுதி மற்றும் திசுக்களைப் பாதித்து, அதன் செயல்பாடுகளைக் குறைத்துவிடும்.

இந்தப் பிரச்னை பொதுவாக, எல்லோருக்கும் வரலாம்; பெரும்பாலும், நடுத்தர வயதுள்ள பெண்களுக்கே அதிகம் ஏற்படுகிறது. கை, கால் மூட்டு வீங்குதல், வலி, உடல் சோர்வு,காய்ச்சல் போன்றவை இதன் முக்கிய அறிகுறிகள். 

அதேபோல உரிய பயிற்சிகள், சிகிச்சைகள் மூலமும் நிவாரணம் பெறலாம். 

முடக்கு வாதம்:

இன்றைய காலத்தில் எந்த ஒரு நோயும் விரைவில் உடலை தாக்குகிறது. அதிலும் சில நேரங்களில் அதிகமாக குனிந்து நிமிர்ந்து வேலை செய்து விட்டால்,ஆங்காங்கு வலிகள் ஏற்படும். இதற்கு உடலில் உள்ள எலும்புகளுக்கு போதிய சத்துக்கள் இல்லை என்பது அர்த்தம். ஆகவே உண்ணும் உணவில் கால்சியம் அதிகம் உள்ள உணவுகளை உண்பது நல்லது.அதிலும் சிலருக்கு மூட்டுகள் மட்டும் அதிக வலியுடன் இருக்கும். அவ்வாறு வலி ஏற்பட்டால், எந்த ஒரு வேலையும் செய்ய முடியாத நிலையில் இருக்கும். அப்படி உங்களுக்கு நீண்ட நாட்கள் வலி இருந்தால்,முடக்கு வாதம் (Rheumatoid Arthritis) உள்ளது என்று அர்த்தம்.

முடக்கு வாதம் என்பது நாள்பட்ட மூட்டுவலி. அதாவது இந்த நோய் வந்தால் பெரும்பாலும் வளையக்கூடிய மூட்டுகளில் உள்ள சதைப் பகுதி மற்றும் திசுக்களை பாதித்து, அதன் செயல்பாடுகளை குறைத்துவிடும்.

அதிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களை விட, மூன்று மடங்கு அதிகமாக பெண்களே பாதிக்கப்படுகின்றனர்.மேலும் இந்த முடக்கு வாதம் நுரையீரல், இதயத்தை சுற்றியிருக்கும் பெரிகார்டியம், நுரையீரலைச் சுற்றியுள்ள ப்ளியூரா, கண்ணின் வெள்ளை பகுதியான ஸ்கிளிரா போன்ற இடங்களில் வீக்கத்தை ஏற்படுத்தும். அதிலும் இந்த முடக்கு வாதத்தை சரிசெய்ய நிறைய சிகிச்சைகள் உள்ளன.

சரி, இப்போது அந்த முடக்கு வாதம் எந்தெந்த இடங்களை எல்லாம், தாக்குமென்று பார்ப்போமா!!!

முழங்கால்கள்:

முழங்கால்களில் வீக்கம் ஏற்பட்டால் நடக்கவே முடியாது. இவை அடிக்கடி ஏற்படுவதற்கு அந்த இடத்தில் உள்ள மூட்டுகளுக்கான திரவம் அதிக அளவில் சுரப்பதால் வீக்கம் ஏற்பட்டு, கடுமையான வலி வருகிறது. அதிலும் இது அடிக்கடி முட்டியில் இடித்தாலோ அல்லது முட்டிக்கால் போடுவதால், அதிகம் ஏற்படுகிறது.

தோள்பட்டை மற்றும் முழங்கை :

எப்போதும் முடக்கு வாதத்தில் பாதிக்கப்படும் இடங்களில் முக்கியமான ஒரு பகுதி தான் தோள்பட்டை. இந்த வலி ஏற்பட்டால், எந்த ஒரு பொருளையும் தூக்க முடியாது. எந்த வேலையும் சரியாக செய்ய முடியாது. ஏன் கையை கூட அசைக்க முடியாத நிலையில் நீண்ட நாட்கள் வலி ஏற்படும்.

கண்கள்:

முடக்கு வாதத்தில் பாதிக்கப்பட்டவர்களின் கண்கள் பெரும்பாலும் வறட்சியுடன் காணப்படும். மேலும் மற்ற கண் பிரச்சனைகளான கருவிழியில் வீக்கம் அல்லது கண்ணின் வெள்ளை பகுதிக்கு செல்லும் இரத்த குழாய்களில் வீக்கம் போன்றவையும் இதற்கு காரணங்களாகின்றன. அந்த வீக்கம் கண்களில் சிவப்பு நிறத்தில் வீக்கத்துடன் காணப்படும்.

கழுத்து மற்றும் தாடை:

சில நேரங்களில் கழுத்து நிறைய வலியுடன் இருக்கும். இவ்வாறு வலியானது நீண்ட நாட்கள் ஏற்பட்டால், கழுத்துடன் இணைந்துள்ள தாடையிலும் வலி ஏற்படும்.

நுரையீரல் மற்றும் இதயம்:

இரத்தத்தை எடுத்துச் செல்லும் இரத்தக் குழாய்களில் வீக்கம் ஏற்பட்டால், சீரான இரத்த ஓட்டம் தடைபட்டு, அவையே அனீமியாவை ஏற்படுத்திவிடுகின்றன. இதனால் இதயம் மற்றும் நுரையீரலுக்கு சரியான இரத்த ஓட்டமில்லாமல், அதைச் சுற்றியுள்ள பகுதியில் வீக்கம், இதய நோய் போன்றவை ஏற்படுகிறது. மேலும் இந்த முடக்கு வாதம் வந்தால், உடல் எடை குறைந்துவிடும்.

கைகள் மற்றும் மணிக்கட்டு:

முடக்கு வாதம் கைகள் மற்றும் மணிக்கட்டுகளில் கூட அதிகம் ஏற்படும். அதிலும் அந்த வலி வந்தால், கை விரல்களை சரியாக மடக்கவோ, கைகளை சுழற்றவோ முடியாது. அதிலும் இது ஏற்படுவதற்கு கைகள் எப்போதும் ஒரே நிலையில் நீண்ட நேரம் இருந்தால், சரியான இரத்த ஓட்டம் இல்லாமல், அந்த இடத்தில் புண் அல்லது வீக்கம் போன்றவை ஏற்படும்.

பாதம் மற்றும் கணுக்கால்:

இந்த நோய் வந்தால், முதலில் பாதிக்கப்படும் இடங்களில் ஒன்று தான் பாதம் மற்றும் கணுக்கால். இந்த இடத்தை தான் முதலில் முடக்கு வாதம் தாக்கும். இவை வந்தால், அதிக வலியுடன், நடக்கக்கூட முடியாமல் இருக்கும்.

டயாவின் சித்த மருத்துவமனையில் Arthritis Treatments வாதநோய் சார்ந்த பிரச்சனைகளுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மூலம் குணமடையலாம்.

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S

24*7 Support / Appointment:

Free Consultation : +91 94898 32921

http://www.diawinsiddhahospital.in/

Email: diawinhealthcare@gmail.com

Tirunelveli – Chennai – Madurai – Coimbatore

பக்கவாதம் என்றால் என்ன?

நமது மூளையில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்பு ஸ்ட்ரோக் அல்லது பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.இவை பாதிக்கப்படும் போது உடலில் உள்ள ஒரு சில அல்லது மொத்த பாகங்களும் அதனுடைய செயல்திறனை முழுமையாகவோ அல்லது ஒரு பக்கமாகவோ இழத்தலே பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.

பக்கவாதம் அறிகுறிகள்

பக்கவாதத்துக்கு அறிகுறிகள் இல்லை. அதுஎப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என்றூ தான் பெரும்பாலும் சொல்கிறார்கள். ஆனால் சற்று முன்கூட்டியே யோசித்தால் சில அறிகுறிகளை முன்கூட்டியே கவனித்தால் உணரமுடியும்.நோயாளியின் முகம் ஒரு பக்கமாக சாய்ந்து காணப்பட்டாலோ அல்லது முகத்தின் ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனது போன்று உணர்ந்தாலோ, உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

பக்கவாத நோயாளி, தன் ஒரு கையோ அல்லது இரு கைகளுமோ மரத்துப் போய் விட்டது போன்றோ அல்லது வலுவிழந்தது போன்றோ உணர்வார். அந்நேரத்தில் அவரது கையை உயர்த்திச் சொல்லிப் பாருங்கள். அவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது கை கீழ் நோக்கி விழுவதைக் காணலாம்.

காரணம் ஏதுமின்றி, ஒருவர் திடீரென தாங்கவியலாத தலைவலியால் அவதிப்படுவாராயின், அது பெரும்பாலும் இரத்த ஒழுங்கினால் உண்டாகக்கூடிய பக்கவாதத்தின் அறிகுறியாகவே இருக்கும்.

திடீரென பார்வை இருளடைதல் அல்லது பார்வைக் கோளாறுகள் போன்றவையும் மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள் தான்.

நாள்பட்ட பக்கவாதத்திலிருந்து முற்றிலும் விடுபட..

சொரியாசிஸ் குணமாக சித்த மருத்துவம்

 சொரியாசிஸ் (காளாஞ்சகப்படை) நோயின் அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள்

சொரியாசிஸ் என்பது ஒரு நாள்பட்ட நோய், அடிக்கடி வந்து போகும். சிகிச்சையின் முக்கிய குறிக்கோள், தோல் செல்கள் விரைவாக வளர்வதை நிறுத்துவதாகும்.

தடிப்புத் தோல் அழற்சி என்பது தோல் செல்களின் வாழ்க்கைச் சுழற்சியை விரைவுபடுத்தும் ஒரு பொதுவான தோல் நிலை. இது சருமத்தின் மேற்பரப்பில் செல்களை விரைவாக உருவாக்குகிறது. மேலும் தோல் செல்கள் அரிப்பு மற்றும் சில நேரங்களில் வலியுடன் கூடிய செதில் மற்றும் சிவப்பு திட்டுகளை உருவாக்குகின்றன.

தடிப்புத் தோல் அழற்சி அறிகுறிகளை  நீங்கள் நிர்வகிக்கலாம். ஈரப்பதமாக்குதல், புகைபிடிப்பதை நிறுத்துதல் மற்றும் மன அழுத்தத்தை நிர்வகித்தல் போன்ற வாழ்க்கை முறை நடவடிக்கைகள் தடிப்புத் தோல் பிரச்சனையை கட்டுப்படுத்த உதவும்.

சொரியாசிஸ் அறிகுறிகள் ஒவ்வொருவருக்கும் வேறுபடும். 

1. தடிமனான, வெண் செதில்களால் மூடப்பட்ட தோலின் சிவப்பு திட்டுகள் மற்றும் சிறிய அளவிலான புள்ளிகள் (பொதுவாக குழந்தைகளுக்கு காணப்படும்)

2. இரத்தம் வரக்கூடிய உலர்ந்த, விரிசல் தோல்

அரிப்பு, எரியும் அல்லது புண் தடிமனான, குழி அல்லது முகடு நகங்கள் வீங்கிய மற்றும் கடினமான மூட்டுகள் போன்றவை.

Types of psoriasis

 • Plague psoriasis.
 • Cutaneous psoriasis.
 • Reverse psoriasis.
 • Pustular psoriasis.
 • Erythrothermic psoriasis.
 • Psoriatic arthritis.

டயாவின் சித்த மருத்துவமனையில் சொரியாசிஸ் நோயை

சித்த மருத்துவ முறையில் குணப்படுத்துகிறோம்….

இதுவரை நீங்கள் கண்டிராத மூலிகை மருந்துகள் மூலம் சிகிச்சையினை தருகின்றோம்.