Call us: 9489832921
e-mail: diawinhealthcare@gmail.com
Head office: Tirunelveli

நீரிழிவு நீங்க கீழாநெல்லி

நீரிழிவு நீங்க கீழாநெல்லி

கீழாநெல்லி இலை – 100 கிராம்

மஞ்சள் கரிசாலை – 100 கிராம்

ஜாதிக்காய் – 50 கிராம்

ஜாதிபத்திரி – 50 கிராம்

வால் மிளகு – 50 கிராம்

ஏலக்காய் – 50 கிராம்

கிராம்பு – 50 கிராம்

மாசிக்காய் – 50 கிராம்

தாளிசபத்திரி – 50 கிராம்

கசகசா – 50 கிராம்

 இவைகளை ஒன்று கலந்து நன்கு அரைத்து சலித்துக் கொள்க.

 2 கிராம் வீதம் காலை, மதியம் இருவேளை உணவுக்குப்பின் 3 மாதம் காலம் சாப்பிட நீரிழிவு நீங்கும்.

மேலும் விபரங்களுக்கு..

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com
Tirunelveli – Chennai – Madurai – Tanjore – Tirupur

காது மூக்கு தொண்டை பாதுகாக்க வழிகள் – ENT சித்த மருத்துவம்

  1. உங்கள் கவனம் உணவில் இருக்க வேண்டும். பேசிக்கொண்டே சாப்பிடும்போது, சில நேரங்களில் உணவானது உணவுக் குழாய்க்குப் போகாமல், காற்றுக் குழாய்க்குப் போய்விடும். இதுவே புரையேறுதல். எனவே, சாப்பிடும்போது பேசக் கூடாது.
  2. காரம், அமிலம் மற்றும் மசாலா உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. தொண்டை வழியாக இரைப்பைக்கு வந்த உணவு, வால்வு சரியாக வேலை செய்யாமல்போனால், மறுபடியும் மேலே வரும். இதைத்தான் நெஞ்சு எரிச்சல் என்போம். உணவை வேகவேகமாக விழுங்கக் கூடாது. தண்ணீர் அதிகமாகக் குடிக்க வேண்டும்.
  3. அவசர அவசரமாகச் சாப்பிடுவது, தண்ணீர் அருந்தாதது போன்ற காரணங்களால் விக்கல் ஏற்படுகிறது. சிலருக்குத் தண்ணீர், பழச்சாறு குடித்தால் விக்கல் நிற்கும். அமைதியாக உட்கார்ந்து, ஐந்து நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட்டால், விக்கல் நிற்கும்.
  4. மது அருந்துதல், புகை பிடித்தல் போன்ற செயல்களால், தொண்டைப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். புகை மற்றும் மது அருந்தும் பழக்கத்தை, உடனடியாக நிறுத்த வேண்டும். மது மற்றும் புகை பழக்கம் உடலுக்கு தீங்கு.
  5. உண்ணும்போது நம்மை அறியாமலேயே, சில சமயம் காற்றும் உள்ளே போகும். இந்தக் காற்றானது வாய் வழியே, வெளியேறுவதே ஏப்பம். அளவுக்கு மீறும்போது இதுவே வாயுப் பிரச்னையாகிவிடும். அடிக்கடி ஏப்பம் வருதல், வயிற்றுப் புண், அஜீரணம், அமில காரத்தன்மை அதிகமாதல் போன்றவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம். எனவே, மருத்துவரை அணுக வேண்டும்.
  6. வைரஸ் தொற்று ஏற்பட்டு சளி, இருமலால் தொண்டையில் வலி, வறட்சி ஏற்படுவதைத் தொண்டைக் கட்டு என்கிறோம். குரலுக்கு ஓய்வு தருவது, நீர் ஆகாரங்கள் அருந்துவது, வெந்நீரில் உப்பு போட்டுக் கொப்பளிப்பது ஆகியவற்றின் மூலம் நிவாரணம் கிடைக்கும். இது தொடர்ந்து இருந்தால், தொண்டையில் சதை, கட்டி இருக்கலாம். மருத்துவரைப் பார்ப்பது அவசியம்.
  7. தொண்டையில் இருந்து காற்று வெளியேறுவதில் தடை ஏற்படுவதால் உண்டாவதுதான் குறட்டை. உடல் பருமன், மூக்கின் தண்டுப் பகுதி மற்றும் எலும்பில் ஏற்படும் குறைபாடு ஆகியவற்றின் காரணமாக குறட்டை வரும். மருத்துவ ஆலோசனை பெற்று, உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்வதன் மூலம், குறட்டைப் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.
  8. அதிகக் குளிர்ச்சி, அதிக சூடு தொண்டையை பதம்பார்த்துவிடும். மிதமான சூடுள்ள உணவுகள், பானங்களே, தொண்டைக்குப் பாதுகாப்பு.
  9. புகையிலை மெல்வதால், தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். புகையிலையை எந்த வடிவிலும் உட்கொள்ளக் கூடாது.
  10. குழந்தைகள் அடிக்கடி தொண்டை வலியால், உணவை விழுங்க முடியாமல் மிகவும் கஷ்டப்படுவர். கழுத்துப் பகுதி வீக்கம், தொண்டையில் உள்ள டான்சில் சதை வீங்குவது இதற்குக் காரணம். பாக்டீரியா தொற்றினால் இது ஏற்படுகிறது. ஐஸ்க்ரீம், குளிர்பானங்களைத் தவிர்த்து, வெந்நீரில் உப்பு போட்டு தொண்டையில் படும்படி கொப்பளிக்கலாம்.

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S

24*7 Support / Appointment:

Free Consultation : +91 94898 32921

Home

கல்லீரல் காக்க – டயாவின் சித்த மருத்துவமனை

கல்லீரல் நோய்கள்:

நம் உடலில் மிகவும் முக்கிய உறுப்பாக கல்லீரலைக் கூறலாம். மிகவும் உணர்திறனுடைய உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பற்பல. செரிமானம், சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது.

கல்லீரல் நோய் அறிகுறிகள்:

அதே நேரத்தில், கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு கல்லீரல் நோய் என்று பெயர். இந்த நோய் ஏற்படுவதை

உடல் நலக் குறைவு,

செரிமான கோளாறுகள்,

பசியின்மை,

வாந்தி,

மயக்கம்,

களைப்பு,

எடை குறைவு ஆகிய பல அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

கல்லீரல் முழுவதுமாக செயலிழந்தால் மாற்றுக் கல்லீரல் பொருத்திக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது.

பெரும்பாலும் குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிப்புகள் அதிகம் ஏற்படுகிறது. கல்லீரல் வீக்கம், கல்லீரல் அழற்சி மற்றும் மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் ஏற்படுகிறது.

மேலும் கல்லீரல் சார்ந்த பிரச்சனைகளுக்கு டயாவின் சித்த மருத்துவமனை மிகச்சிறந்த சிகிச்சை மூலம் குணப்படுத்துகிறது.

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S

24*7 Support / Appointment:

Free Consultation : +91 94898 32921

Home

Email: diawinhealthcare@gmail.com

தைராய்டு சுரப்பி

இன்றைக்கு அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்னைகளில், தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு உருவெடுத்துள்ளது.

தைராய்டு என்பது நமது உடலின் கழுத்து பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி. இதில் சுரக்கும் ஹார்மொனின் அளவு அதி கமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போதைராய்டிஸம் (Hypothyroidism) என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்பர் தைராய்டிஸம் (Hyperthyroidism) என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தைராய்டு அறிகுறிகள்
தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை குறையும். பிறகு செயல்பாடுகள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அதேநேரத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும்போது, திடீரென உடல் எடை அதிகரிக்கும். ஒருவிதமான எரிச்சல், பதற்றம், இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படுவது இதன் முக்கியமான அறிகுறிகளாகும். குறிப்பாக, பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு, கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்னை என வரிசை கட்டி நிற்கும்.

முறையான சிகிச்சைகள் மற்றும் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் நலம் பெறலாம்.