பொதுவாக பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் இரத்த ஓட்ட தடைபட்டால் வரும் ஒருவித நோயாகும் இந்த இரத்த ஓட்டம் இருவகைகளில் தடைபடுகிறது
1. இரத்தம் உறைதல்
2 இரத்தநாளம் வெடித்தல்
இவ்வாறு இரத்த ஓட்டம் தடைபடும் பொழுது நம் கை மற்றும் கால்களின் செயல்பாடுகள் தடை செய்யப்பட்டு நம்மால் உழைக்க முடியாத சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. இதனால் நம் உடல்நலம் மற்றுமின்றி நம் பொருளாதாரமும் பாதிக்கபப்டுகிறது. நம்மை சார்ந்தவர்களையும் மனஉளைச்சலுக்கு ஆளாக்குகிறது. இதனால் “வருமுன் காப்பதே நலம்” என்ற நம் முன்னோர்களின் கூற்றுப்படி பக்கவாதம் வராமல் கவனமாக இருப்பது நல்லது ஒருவேளை வந்தாலும் அதை பற்றிக் கவலைப்பட தேவையில்லை .சித்த மருத்துவத்தில் இதற்கு சிகிச்சை உண்டு. நம் சித்தர்கள் மருத்துவத்தில் சிறந்தவர்கள், அவர்கள் இயற்கை மருந்துகளால் நோய்களை குணப்படுத்துவதில் வல்லவர்கள். அவர்களின் குறிப்புகளின்படி சித்த மருந்துகளால் இரத்த ஓட்டத்தை சீர்படுத்தி செயலிழந்த கை கால்களின் இயக்கத்தை சரிசெய்ய முற்படும் போது பக்கவாதத்திலிருந்து விடுதலை பெற முடியும். இதையே எங்கள் சித்த மருத்துவமும் செய்கிறது