Call us: 9489832921
e-mail: diawinhealthcare@gmail.com
Head office: Tirunelveli

பக்கவாதம் குணப்படுத்தும் வழி முறைகள்

Stroke, paralytic attack என ஆங்கிலத்தில் கூறுவதைப் பக்கவாதம் எனத் தமிழில் கூறுவார்கள். இந்த நோயும், நோயின் தன்மைகள் என்ன என்று மக்களுக்குத் தெரியவேண்டும். பக்கவாதம் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று Ischemic stroke என்பது. இதில் மூளைக்குப் செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும். அவ்வாறு அடைப்பு ஏற்பட்ட பின் அந்த மூளையின் நரம்பு செல்கள் எல்லாம் செயலிழந்து போவதாலும் ஏற்படும் பக்கவாதம் ஆகும்.

மற்றொன்று முற்றிலும் எதிரானது அதனை இரத்த வெடிப்பு என்போம். இரத்தக்கொதிப்பினால் மூளைக்குப் போகின்ற இரத்தக்குழாய் வெடிப்பதால் மூளையில் இரத்தக்கசிவு ஏற்படுவது Hemorrahagic Stroke. இந்த இரண்டு வகையான பக்கவாதத்திற்கும், வைத்தியங்கள், காரணங்கள் எல்லாமே வித்தியாசப்படும். இதை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும், பக்கவாதம் என்றால் என்ன? அதனால் என்ன தொந்தரவு வருகிறது.

நோக்கம்

இப்பொழுது மக்களுக்கு புற்றுநோய், இதயநோய் என்ன என்பது அனைவருக்குமே சிறிது சிறிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கிறது. நெஞ்சுவலி என்றால் உடனே மாரடைப்பு என்று தெரிந்துகொண்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். பின் தொடர்ந்து பரிசோதனை செய்து சிறிது நாள் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள் பின் வேலைக்குச் செல்கிறார்கள்.

ஆனால் பக்கவாதம் என்பது அவ்வாறு இல்லை. அதற்கு சிறிய அறிகுறி கிடையாது. மூளையின் செயல்களில் ஒவ்வொன்றும் செயலிழக்கச் செயலிழக்க பக்கவாதத்தின் அறிகுறி வித்தியாசமாக இருக்கும். அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் 6 விநாடியில் ஒருவருக்கு பக்கவாதம் வந்துகொண்டிருக்கிறது. ஆறு நபர்கள் ஓரிடத்தில் இருக்கிறோம் என்றால் அந்த ஆறு நபர்களில் ஒருவருக்கு பக்கவாதம் அவர்களுடைய வாழ்க்கையில் ஒருமுறை வரும். இப்பொழுது 30 மில்லியன் மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை பக்கவாதம் வந்த அந்த நாளே இறக்கிறார்கள். உலகத்தில் மக்கள் இறப்பதற்கு முக்கியமான நோய் மாரடைப்புதான். இரண்டாவது முக்கியமான நோய் பக்கவாதம். பக்கவாதம் என்று வந்துவிட்டால் நடக்க முடியாது, பேசமுடியாது, ஞாபகசக்தி இருக்காது இவையெல்லாம் ஒருவகையில் ஊனமே.

எந்த நோய் மனிதர்களுக்கு வரும் ஊனத்திற்கு மிகமுக்கியமான காரணம் என்று பார்த்தோமென்றால் அது பக்கவாதம் தான். ஏனென்றால் நெஞ்சுவலி வந்தால் கூட அதைச் சரிசெய்யலாம், வேலைக்குச் செல்லலாம், சம்பாதிக்கலாம், குடும்பத்தை கவனித்துக் கொள்ளலாம். ஆனால் பக்கவாதம் என்று வந்துவிட்டால் அவர்கள் படுத்த படுக்கையாகிவிடுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கமுடியாது, எந்த வேலைக்கும் போக முடியாது, சம்பாதிக்க முடியாது. இது அவர்களுக்கு மட்டுமே தொந்தரவு கிடையாது. மக்கள் சமூகத்திற்கே இது ஊனம்.

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com

பக்கவாதம் தடுப்பு முறைகள் என்ன?

பக்கவாதம்

பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் ரத்தத்தில் அடைப்பு ஏற்படுவதாகும். இதனால் ஆக்சிஸன் கிடைக்காது. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் மூளையின் செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. இதனால் கை, கால் அசைவின்மை, பேச முடியாமை போன்ற பல தாக்குதல்கள் ஏற்படுகின்றன. 

பக்கவாதம் யாருக்கும் எந்த நேரமும் ஏற்படலாம். சில தவிர்ப்பு முறைகளை கையாளுவதன் மூலம் நம்மால் இயன்ற வழியில் இத்தாக்குதலை தவிர்த்துக் கொள்ளலாம். 

  பக்கவாதம் தடுப்பு முறைகள் 

* உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் எப்பொழுதும் இதனை மருத்துவ அறிவுரைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

* கொலஸ்டிரால் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

* இருதய நோய் பாதிப்பு உடையவர்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் கூடுதல் என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

* மது பழக்கத்தினையும், புகை பிடித்தலையும் அடியோடு நிறுத்தி விடுவது நல்லது.

* அதிக எடை இல்லாமல் சரியான எடையில் உடல் இருக்க வேண்டும்.

* அதிக மன உளைச்சல் இல்லாது இருப்பது மிக அவசியமாகும். 

* யோகா மற்றும் மனதை ஒரு நிலை படுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

முதுமை பக்கவாதத்திற்கு கூடுதல் காரணம் ஆகின்றது. என்றாலும், ஆரம்ப காலத்தில் இருந்தே நம்மை முறையாக பாதுகாத்துக் கொண்டால் பக்கவாத தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். 

பக்கவாதம் மற்றும் முடக்கு வாதம் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் பற்றிய மருத்துவ ஆலோசனைக்கு, 

பக்கவாதத்தை தடுக்குமா யோகா பயிற்சி

யோகா நமது மனதைக் கட்டுப்படுத்தி, மனதை ஒரு நிலைப்படுத்தி நம் உள்ளே இருக்கின்ற ‘இறை சக்தி’யை அல்லது ‘இறை தன்மை’யை மற்றும் தன்னை அறிய உதவும் பயிற்சி தான் யோகா.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி தன்னம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்ததோடு உடல் நலத்தையும் சரிசெய்துள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகா மூளைக்கு சீரான இரத்த ஒட்டத்தையும் மூளைக்கு புத்துணர்ச்சியையும் தரக் கூடியது. இதனால் மூளையில் செயல் திறன் அதிகரிக்கின்றது. உடலின் செயல்பாடுகள் சீராகுகின்றன. தூக்கமின்மை, ஒய்வின்மை கவனக் குறைவு குழப்பமான மனநிலை தேவையற்ற பயம் ஆகியவை மூளையின் செயல்பாட்டிற்கு இடையூறு தரக் கூடியவை.

யோகா இவற்றை போக்கி இத்தகைய பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான மனநிலையையும் நல்ல மூளைச் செயல்பாட்டையும் ஞாபக சக்தியையும் தருவதாக யோகா ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

முதுமை காரணமாக பக்கவாதம் தாக்கியவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டால் எளிதில் அவர்களின் உடல்நிலை சரியாவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாத நோய் தாக்கியவர்கள் சிலருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டதில் 35 சதவிகிதம் வரை அவர்கள் நோயிலிருந்து மீண்டிருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

பக்கவாதம் மற்றும் முடக்கு வாதம் நோய்களிலிருந்து விடுபட சித்த மருத்துவ முறையில் தீர்வு..

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S

24*7 Support / Appointment:

Free Consultation : +91 94898 32921

பக்கவாதம் வந்தால் குணப்படுத்தமுடியுமா?

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 15 மில்லியனுக்கும் அதிகமான பேர்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்படுகிறார்கள்,

இதில் பாதி பேர் பக்கவாதம் தாக்கிய உடனேயே இறந்துவிட்டதாகவும், மீதமுள்ளவர்கள் ஊனமுற்றவர்களாகவும் உள்ளனர். நம்மிடையே ஒரு பொதுவான தவறான கருத்து உள்ளது. ஒரு பக்கவாதம் வயதானவர்களுக்கு அல்லது 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படுகிறது, ஆனால் உண்மை என்னவென்றால், பக்கவாதம் இளையவர்களிடமும் ஏற்படலாம்.

உண்மையில் பக்கவாதம் நோய் என்றால் என்ன? அது ஏன் ஏற்படுகிறது?

ஆக்ஸிஜனுக்காக ஏங்கும் நம் உடலின் மற்ற உறுப்புகளைப் போலவே, நமது மூளையும் அதையே செய்கிறது, ஆனால் இரத்த ஓட்டம் அல்லது துல்லியமான ஆக்ஸிஜன் துண்டிக்கப்படும் போது, ​​மருத்துவர்கள் அதை பக்கவாதம், பக்கவாதம், ஹெமிபரேசிஸ் என்று அழைக்கிறார்கள். மூளையின் குறிப்பிடத்தக்க செயல்பாட்டை நாம் அனைவரும் அறிந்திருப்பதால், பல சந்தர்ப்பங்களில் மக்கள் ஏன் ஊனமுற்றவர்களாக இருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

மூளையில் ஆக்ஸிஜன் இல்லாத பகுதியைப் பொறுத்து பக்கவாதத்தின் விளைவு நபருக்கு நபர் மாறுபடும். சிலர் முகத்தை சாய்த்துக்கொள்வார்கள், சிலர் நினைவாற்றல் இழப்பில் முடிவடைவார்கள். ஆயினும் கூட, பக்கவாதத்தால் ஏற்படும் பல நிலைமைகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் குணப்படுத்த முடியும்.

#பக்கவாதம், #முடக்குவாதம், #விரைவாதம், #முதுகுத்தண்டுவட பிரச்சனை மற்றும் #மூட்டுவலி போன்ற, நாள் பட்ட சிரமமான பிரச்சனைகளிலிருந்து விடுபட #டயாவின் சித்த மருத்துவமனை.

சித்த மருத்துவ சிகிச்சை மூலம் 200 க்கும் மேற்பட்டவர்களை குணம் பெற செய்த, சித்த மருத்துவர் #மெல்வின் அவர்களிடம் மருத்துவ ஆலோசனை பெற.. 94898 32921

பக்கவாதம் என்றால் என்ன?

நமது மூளையில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்பு ஸ்ட்ரோக் அல்லது பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.இவை பாதிக்கப்படும் போது உடலில் உள்ள ஒரு சில அல்லது மொத்த பாகங்களும் அதனுடைய செயல்திறனை முழுமையாகவோ அல்லது ஒரு பக்கமாகவோ இழத்தலே பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.

பக்கவாதம் அறிகுறிகள்

பக்கவாதத்துக்கு அறிகுறிகள் இல்லை. அதுஎப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என்றூ தான் பெரும்பாலும் சொல்கிறார்கள். ஆனால் சற்று முன்கூட்டியே யோசித்தால் சில அறிகுறிகளை முன்கூட்டியே கவனித்தால் உணரமுடியும்.நோயாளியின் முகம் ஒரு பக்கமாக சாய்ந்து காணப்பட்டாலோ அல்லது முகத்தின் ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனது போன்று உணர்ந்தாலோ, உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம்.

பக்கவாத நோயாளி, தன் ஒரு கையோ அல்லது இரு கைகளுமோ மரத்துப் போய் விட்டது போன்றோ அல்லது வலுவிழந்தது போன்றோ உணர்வார். அந்நேரத்தில் அவரது கையை உயர்த்திச் சொல்லிப் பாருங்கள். அவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது கை கீழ் நோக்கி விழுவதைக் காணலாம்.

காரணம் ஏதுமின்றி, ஒருவர் திடீரென தாங்கவியலாத தலைவலியால் அவதிப்படுவாராயின், அது பெரும்பாலும் இரத்த ஒழுங்கினால் உண்டாகக்கூடிய பக்கவாதத்தின் அறிகுறியாகவே இருக்கும்.

திடீரென பார்வை இருளடைதல் அல்லது பார்வைக் கோளாறுகள் போன்றவையும் மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள் தான்.

நாள்பட்ட பக்கவாதத்திலிருந்து முற்றிலும் விடுபட..