Call us: 9489832921
e-mail: diawinhealthcare@gmail.com
Head office: Tirunelveli
stroke

பக்கவாதம் தடுப்பு முறைகள் என்ன?

பக்கவாதம்

பக்கவாதம் என்பது மூளைக்கு செல்லும் ரத்தத்தில் அடைப்பு ஏற்படுவதாகும். இதனால் ஆக்சிஸன் கிடைக்காது. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடத்தில் மூளையின் செல்கள் இறக்கத் தொடங்குகின்றன. இதனால் கை, கால் அசைவின்மை, பேச முடியாமை போன்ற பல தாக்குதல்கள் ஏற்படுகின்றன. 

பக்கவாதம் யாருக்கும் எந்த நேரமும் ஏற்படலாம். சில தவிர்ப்பு முறைகளை கையாளுவதன் மூலம் நம்மால் இயன்ற வழியில் இத்தாக்குதலை தவிர்த்துக் கொள்ளலாம். 

  பக்கவாதம் தடுப்பு முறைகள் 

* உயர் ரத்த அழுத்தம் உடையவர்கள் எப்பொழுதும் இதனை மருத்துவ அறிவுரைப்படி கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

* கொலஸ்டிரால் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

* இருதய நோய் பாதிப்பு உடையவர்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* சர்க்கரை நோயாளிகளுக்கு பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் கூடுதல் என்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவினை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்.

* மது பழக்கத்தினையும், புகை பிடித்தலையும் அடியோடு நிறுத்தி விடுவது நல்லது.

* அதிக எடை இல்லாமல் சரியான எடையில் உடல் இருக்க வேண்டும்.

* அதிக மன உளைச்சல் இல்லாது இருப்பது மிக அவசியமாகும். 

* யோகா மற்றும் மனதை ஒரு நிலை படுத்துதல் போன்ற பயிற்சிகளை மேற்கொள்ளலாம்.

முதுமை பக்கவாதத்திற்கு கூடுதல் காரணம் ஆகின்றது. என்றாலும், ஆரம்ப காலத்தில் இருந்தே நம்மை முறையாக பாதுகாத்துக் கொண்டால் பக்கவாத தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ளலாம். 

பக்கவாதம் மற்றும் முடக்கு வாதம் மற்றும் மூட்டு வலி போன்ற பிரச்சனைகள் பற்றிய மருத்துவ ஆலோசனைக்கு, 

Previous ArticleNext Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *