நமது மூளையில் உள்ள ரத்தக்குழாய்களில் ஏற்படும் பாதிப்பு ஸ்ட்ரோக் அல்லது பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.இவை பாதிக்கப்படும் போது உடலில் உள்ள ஒரு சில அல்லது மொத்த பாகங்களும் அதனுடைய செயல்திறனை முழுமையாகவோ அல்லது ஒரு பக்கமாகவோ இழத்தலே பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.
பக்கவாதம் அறிகுறிகள்
பக்கவாதத்துக்கு அறிகுறிகள் இல்லை. அதுஎப்போது வேண்டுமானாலும் வரக்கூடும் என்றூ தான் பெரும்பாலும் சொல்கிறார்கள். ஆனால் சற்று முன்கூட்டியே யோசித்தால் சில அறிகுறிகளை முன்கூட்டியே கவனித்தால் உணரமுடியும்.நோயாளியின் முகம் ஒரு பக்கமாக சாய்ந்து காணப்பட்டாலோ அல்லது முகத்தின் ஒரு பக்கம் மட்டும் மரத்துப் போனது போன்று உணர்ந்தாலோ, உடனடியாக மருத்துவ உதவி பெறுவது அவசியம்.
பக்கவாத நோயாளி, தன் ஒரு கையோ அல்லது இரு கைகளுமோ மரத்துப் போய் விட்டது போன்றோ அல்லது வலுவிழந்தது போன்றோ உணர்வார். அந்நேரத்தில் அவரது கையை உயர்த்திச் சொல்லிப் பாருங்கள். அவர் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது கை கீழ் நோக்கி விழுவதைக் காணலாம்.
காரணம் ஏதுமின்றி, ஒருவர் திடீரென தாங்கவியலாத தலைவலியால் அவதிப்படுவாராயின், அது பெரும்பாலும் இரத்த ஒழுங்கினால் உண்டாகக்கூடிய பக்கவாதத்தின் அறிகுறியாகவே இருக்கும்.
திடீரென பார்வை இருளடைதல் அல்லது பார்வைக் கோளாறுகள் போன்றவையும் மூளை பக்கவாதத்தின் அறிகுறிகள் தான்.
நாள்பட்ட பக்கவாதத்திலிருந்து முற்றிலும் விடுபட..