Stroke, paralytic attack என ஆங்கிலத்தில் கூறுவதைப் பக்கவாதம் எனத் தமிழில் கூறுவார்கள். இந்த நோயும், நோயின் தன்மைகள் என்ன என்று மக்களுக்குத் தெரியவேண்டும். பக்கவாதம் என்பது இரண்டு வகைப்படும். ஒன்று Ischemic stroke என்பது. இதில் மூளைக்குப் செல்லும் இரத்தக்குழாயில் அடைப்பு ஏற்படும். அவ்வாறு அடைப்பு ஏற்பட்ட பின் அந்த மூளையின் நரம்பு செல்கள் எல்லாம் செயலிழந்து போவதாலும் ஏற்படும் பக்கவாதம் ஆகும்.
மற்றொன்று முற்றிலும் எதிரானது அதனை இரத்த வெடிப்பு என்போம். இரத்தக்கொதிப்பினால் மூளைக்குப் போகின்ற இரத்தக்குழாய் வெடிப்பதால் மூளையில் இரத்தக்கசிவு ஏற்படுவது Hemorrahagic Stroke. இந்த இரண்டு வகையான பக்கவாதத்திற்கும், வைத்தியங்கள், காரணங்கள் எல்லாமே வித்தியாசப்படும். இதை ஏன் தெரிந்துகொள்ளவேண்டும், பக்கவாதம் என்றால் என்ன? அதனால் என்ன தொந்தரவு வருகிறது.
நோக்கம்
இப்பொழுது மக்களுக்கு புற்றுநோய், இதயநோய் என்ன என்பது அனைவருக்குமே சிறிது சிறிதாக அறிமுகமாகிக்கொண்டிருக்கிறது. நெஞ்சுவலி என்றால் உடனே மாரடைப்பு என்று தெரிந்துகொண்டு உடனடியாக மருத்துவமனைக்குச் செல்கிறார்கள். பின் தொடர்ந்து பரிசோதனை செய்து சிறிது நாள் மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள் பின் வேலைக்குச் செல்கிறார்கள்.
ஆனால் பக்கவாதம் என்பது அவ்வாறு இல்லை. அதற்கு சிறிய அறிகுறி கிடையாது. மூளையின் செயல்களில் ஒவ்வொன்றும் செயலிழக்கச் செயலிழக்க பக்கவாதத்தின் அறிகுறி வித்தியாசமாக இருக்கும். அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால் 6 விநாடியில் ஒருவருக்கு பக்கவாதம் வந்துகொண்டிருக்கிறது. ஆறு நபர்கள் ஓரிடத்தில் இருக்கிறோம் என்றால் அந்த ஆறு நபர்களில் ஒருவருக்கு பக்கவாதம் அவர்களுடைய வாழ்க்கையில் ஒருமுறை வரும். இப்பொழுது 30 மில்லியன் மக்கள் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 30 சதவீதத்திலிருந்து 40 சதவீதம் வரை பக்கவாதம் வந்த அந்த நாளே இறக்கிறார்கள். உலகத்தில் மக்கள் இறப்பதற்கு முக்கியமான நோய் மாரடைப்புதான். இரண்டாவது முக்கியமான நோய் பக்கவாதம். பக்கவாதம் என்று வந்துவிட்டால் நடக்க முடியாது, பேசமுடியாது, ஞாபகசக்தி இருக்காது இவையெல்லாம் ஒருவகையில் ஊனமே.
எந்த நோய் மனிதர்களுக்கு வரும் ஊனத்திற்கு மிகமுக்கியமான காரணம் என்று பார்த்தோமென்றால் அது பக்கவாதம் தான். ஏனென்றால் நெஞ்சுவலி வந்தால் கூட அதைச் சரிசெய்யலாம், வேலைக்குச் செல்லலாம், சம்பாதிக்கலாம், குடும்பத்தை கவனித்துக் கொள்ளலாம். ஆனால் பக்கவாதம் என்று வந்துவிட்டால் அவர்கள் படுத்த படுக்கையாகிவிடுவார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடக்கமுடியாது, எந்த வேலைக்கும் போக முடியாது, சம்பாதிக்க முடியாது. இது அவர்களுக்கு மட்டுமே தொந்தரவு கிடையாது. மக்கள் சமூகத்திற்கே இது ஊனம்.
Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com