Call us: 9489832921
e-mail: diawinhealthcare@gmail.com
Head office: Tirunelveli
Diabetes

தைராய்டு சுரப்பி

இன்றைக்கு அதிகரித்துவரும் உடல்நலப் பிரச்னைகளில், தைராய்டு அனைத்து வயதினரையும் பாதிக்கும் பிரச்னையாக உள்ளது. குறிப்பாக, பெண்களை அதிகம் அச்சுறுத்தக்கூடிய நோய்களில் முக்கியமானதாக தைராய்டு உருவெடுத்துள்ளது.

தைராய்டு என்பது நமது உடலின் கழுத்து பகுதியில் வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் ஒரு நாளமில்லா சுரப்பி. இதில் சுரக்கும் ஹார்மொனின் அளவு அதி கமாக இருந்தாலும் குறைவாக இருந்தாலும் இரண்டுமே உடலில் பல்வேறு பிரச்சனைகளை உண்டாக்கும். தைராய்டு மிகக் குறைவாக சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்போதைராய்டிஸம் (Hypothyroidism) என்றும் தைராய்டு அளவுக்கு அதிகமாகச் சுரப்பதால் ஏற்படும் பிரச்னையை ஹைப்பர் தைராய்டிஸம் (Hyperthyroidism) என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

தைராய்டு அறிகுறிகள்
தைராய்டு சுரப்பு அதிகமானால் ஆரம்ப நிலையில் உடல் சோர்வாக இருப்பதோடு, உடல் எடை குறையும். பிறகு செயல்பாடுகள் மந்தமாகும். சாதாரணக் குளிரைக்கூடத் தாங்க முடியாத நிலை ஏற்படும். அதேநேரத்தில் தைராய்டு குறைவாக சுரக்கும்போது, திடீரென உடல் எடை அதிகரிக்கும். ஒருவிதமான எரிச்சல், பதற்றம், இதயத்துடிப்பில் மாறுபாடு ஏற்படுவது இதன் முக்கியமான அறிகுறிகளாகும். குறிப்பாக, பெண்களுக்கு முறையற்ற மாதவிலக்கு, கருச்சிதைவு மற்றும் கருத்தரிப்பதில் பிரச்னை என வரிசை கட்டி நிற்கும்.

முறையான சிகிச்சைகள் மற்றும் உணவு கட்டுப்பாடுகளை மேற்கொண்டால் நலம் பெறலாம்.

Previous ArticleNext Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *