நம் உடலில் இருக்கும் குடல்வால்வு(Appendicitis) என்னும் உறுப்பில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அந்த உறுப்பு தேவையற்ற உறுப்பு எனக் கருதி பலர் அதை அறுவைசிகிச்சை மூலம் உடலிலிருந்து நீக்கி விடுகின்றனர். ஆனால் அதன் பயன்பாடும் உடலுக்கு தேவை என்பதை பலர் மறந்து விடுகின்றனர். நம் உடலிலிருக்கும் எந்தவொரு உறுப்பும் தேவையற்றதல்ல என்பதை நாம் அனைவரும் உணர வேண்டும். அந்த உறுப்புகளை சித்த மருந்துகள் மூலம் அறுவைசிகிச்சையின்றி காப்பாற்றிக்கொள்ள முடியும்.