அசோஸ்பெர்மியா – Azoospermia (No Sperm Count)
அசோஸ்பெர்மியா என்பது ஆண்களுக்கு ஏற்படும் பிரச்சனை. ஆண் கருவுறாமை நிலைக்கு காரணம் ஆகும். இந்த பாதிப்பில் ஆணிடம் விந்தணுக்கள் பூஜ்ஜிய நிலையில் இருக்கும். ஆண் மலட்டுத்தன்மையை அனுபவிக்கும் 10 பேரில் 1 பேரை பாதிக்கும். இந்த நிலையில் பாதிக்கப்பட்ட ஆண்கள் விந்தணுக்கள் இல்லாத நிலையில் இருப்பார்கள். மருத்துவரின் ஆலோசனை பெற்று விந்து பரிசோதனை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.
அசோஸ்பெர்மியா & விந்தனுக்கள் குறைபாட்டிற்கான அறிகுறிகள்:-
ஓரிரு வருடத்திற்கு மேலாக கருவுறாமை நீடிக்கும் போது நீங்கள் அசோஸ்பெர்மியா அறிகுறிகளை கண்டு கொள்ளாமல் இருக்க வாய்ப்பு உள்ளது. அசோஸ்பெர்மியா வெளிப்படுத்தும் அறிகுறிகள் இதோவிதைகள் சிறிய அல்லது முழுமையாக வளராத விதிகளும் கூட விந்து குறைபாடு ஏற்படுவதற்கான அறிகுறியாக இருக்கிறது.பாலியல் உணர்ச்சி அல்லது உடலுறவு சார்ந்த வேட்கை குறைவது.குறைந்த விந்துதள்ளல் திரவம் அல்லது உலர்ந்த புணர்ச்சியைக் கொண்டிருத்தல். உடலுறவில் திருப்தி இல்லாமை.குறைக்கப்படாத அல்லது சிறிய அளவில் விந்தணுக்கள் வெளியேற்றம்.வீங்கிய விந்தணுக்கள் மற்றும் சீல் பிடித்த விந்து. விந்து வெளியாவதில் சிரமம், குறைந்த உடலுறவு இயக்கம் (விறைப்புத்தண்மை குறைபாடு)குறைந்த ஆண் முடி வளர்ச்சி அல்லது தலை முடி அதிகம் உதிர்தல்.மேற்கூறிய அறிகுறிகள் இல்லாமலும் அசோஸ்பெர்மியா ஏற்படலாம்.
விந்தணுக்கள் குறைபாட்டிற்கான காரணிகள்:-
ஆண்களுக்கான டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் போதிய அளவில் உற்பத்தி செய்யாவிட்டால், விந்தணுக் குறைபாடு அல்லது அசோஸ்பெர்மியா ஏற்படலாம். ஆண்களுக்கு விதைப்பையில் விதைகள் போதிய வளர்ச்சியின்மை, விதைப்பை வலி மற்றும் விதையில் ஏற்படும் நரம்பு சுருள் பிரச்சனைகள் விந்தணுக்கள் உற்பத்தியை பாதிக்கக்கூடும்.
விந்தணு குறைபாடுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது புகைபிடிக்கும் பழக்கம். புகைப்பிடிப்பதால் அதில் உள்ள புகையிலை விந்தணுக்களை அழித்து, அதன் உற்பத்தியைக் குறைத்துவிடும்.ஜங்க் உணவுகள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் உடலில் விந்தணுக்களை உற்பத்தி செய்ய தேவையான சத்துக்கள் கிடைக்காமல், விந்தணு குறைபாட்டை ஏற்படுத்திவிடும்.தினமும் போதிய தூக்கம் இல்லாவிட்டால், உடலானது சோர்ந்து விடும்.
இவ்வாறு உடல் சோர்வடைந்தால், விந்தணுக்கள் செயல்படுவதற்கு போதிய ஆற்றல் இல்லாமல், அதன் சக்திகுறைந்துவிடும். செல்போன்களில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு மற்றும் அதிர்வு, விதைப்பைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். லேப்டாப்பை மடியில் வைத்து வேலை பார்ப்பதால் விந்தணு குறைபாடு ஏற்படும் என கூறப்படுகிறது. இவை அனைத்தும் விந்தணு குறைபாடுக்கான காரணங்கள் தான். மேலும், ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களை மேற்கொள்வதன் மூலம் விந்தணு உற்பதியை பெருக்கி கொள்ள முடியும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் விபரங்களுக்கு..
Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com
Tirunelveli – Chennai – Madurai – Tirupur – Hosur – Thanjavur