கருப்பை நீர்கட்டிகள்
பொதுவாக பெரும்பாலான பெண்களுக்கு இப்போதெல்லாம் கருப்பை நீர்கட்டி என்னும் கோளாறு ஏற்படுகிறது. ஆங்கிலத்தில் பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் (Polycystic Ovarian Syndrome)(pcos or pcod) என இந்த குறைபாடு அழைக்கப்படுகிறது. பல நீர் நிரம்பிய கட்டிகள் கர்ப்பபையில் தோன்றுவதன் மூலமாக பாலிசிஸ்டிக் ஓவரியன் சின்றோம் ஏற்படுகிறது. இது குறிப்பாக குழந்தையின்மைக்கு பெரும் காரணமாக இந்த கருப்பை நீர்கட்டி உள்ளது. குறிப்பாக பெண்களின் மாதவிடாய் பிரச்சனைகளுக்கும், கர்ப்பபையில் நீர்கட்டி பிரச்சனைகளுக்கும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை.
சினைப்பை நீர் கட்டி வர காரணம்:
ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வுகளால் இந்நோய் உண்டாகிறது என ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.
பெரும்பாலும் இளம்பெண்களே அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். 15 முதல் 25 வயதுள்ள பெண்களுக்கு தற்போது அதிகமாக இந்நோய் அதிகமாக காணப்படுகிறது.
வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் வேலைப்பளுவும், மன அழுத்தமும் முக்கிய காரணமாக இருக்கிறது.
கருப்பை நீர்கட்டி அறிக்குறிகள் :
இதன் அறிக்குறிகள் ஒருவருக்கொருவர் வேறுபடும். பெரும்பாலானவர்கள் கூறும் ஓரே அறிகுறி அசாதரணமான மாதவிடாய் சுழற்சி.
இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆண் ஹார்மோன்கள் அதிகம் சுரப்பதால், முகத்தில் அதிகம் ரோமம் வளர்தல், முடி கொட்டுதல், குரல் வேறுபடுதல், முகத்தில் பரு, உடல் எடை அதிகரித்தல், மன அழுத்தம் மற்றும் மலட்டுத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
எந்த உணவு முறையை எடுத்துக் கொள்ளலாம்?
நீர் கட்டி குணமாக கம்பு, கேழ்வரகு, சோளம், தினை, சாமை, குதிரை வாலி போன்ற சிறுதானிய வகைகள் உணவாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
மேலும் நீர்க்கட்டி குணமாக காய்கறிகள், கீரை வகைகள், பழங்கள் போன்றவற்றையும் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.
நீர் கட்டி குணமாக முடிந்த அளவு நல்லெண்ணெய், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தவிர்க்கப்பட வேண்டிய உணவு வகைகள்:
மைதா, ரவை, பட்டை தீட்டிய அரிசி, பிராய்லர் கோழி, முட்டை, எண்ணெயில் பொறித்த உணவுகள் போன்றவற்றை தவிர்த்து விடுவது மிகவும் நல்லது.
உடற்பயிற்சி:
நீர் கட்டி குணமாக காலை, மாலை என்று இரண்டு வேளை நடந்து செல்வது மிகவும் நல்லது. முடிந்தளவு உடற்பயிற்சி செய்வது மிகவும் நல்ல முறையாகும்.
டயாவின் சித்த மருத்துவமனையில் சித்த மருத்துவ முறையில் நாங்கள், பெண்களுக்கு (சினைப்பை நீர்க்கட்டி PCOS & PCOD) பிரச்சனையால் ஏற்படும் குழந்தையின்மை குறைபாட்டை சரி செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு தொடர்புக்கு
Dr. Melwin B.S.M.S.,D.V.M.S
24*7 Support / Appointment:
Free Consultation : +91 94898 32921
http://www.diawinsiddhahospital.in/
Email: diawinhealthcare@gmail.com