Call us: 9489832921
e-mail: diawinhealthcare@gmail.com
Head office: Tirunelveli
stroke

பக்கவாதத்தை தடுக்குமா யோகா பயிற்சி

யோகா நமது மனதைக் கட்டுப்படுத்தி, மனதை ஒரு நிலைப்படுத்தி நம் உள்ளே இருக்கின்ற ‘இறை சக்தி’யை அல்லது ‘இறை தன்மை’யை மற்றும் தன்னை அறிய உதவும் பயிற்சி தான் யோகா.

பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு யோகா பயிற்சி தன்னம்பிக்கையும், உற்சாகத்தையும் அளித்ததோடு உடல் நலத்தையும் சரிசெய்துள்ளதாக அந்த ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யோகா மூளைக்கு சீரான இரத்த ஒட்டத்தையும் மூளைக்கு புத்துணர்ச்சியையும் தரக் கூடியது. இதனால் மூளையில் செயல் திறன் அதிகரிக்கின்றது. உடலின் செயல்பாடுகள் சீராகுகின்றன. தூக்கமின்மை, ஒய்வின்மை கவனக் குறைவு குழப்பமான மனநிலை தேவையற்ற பயம் ஆகியவை மூளையின் செயல்பாட்டிற்கு இடையூறு தரக் கூடியவை.

யோகா இவற்றை போக்கி இத்தகைய பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு ஆரோக்கியமான மனநிலையையும் நல்ல மூளைச் செயல்பாட்டையும் ஞாபக சக்தியையும் தருவதாக யோகா ஆசிரியர்கள் தெரிவிக்கிறார்கள்.

முதுமை காரணமாக பக்கவாதம் தாக்கியவர்கள் யோகா பயிற்சி மேற்கொண்டால் எளிதில் அவர்களின் உடல்நிலை சரியாவதாக ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. பக்கவாத நோய் தாக்கியவர்கள் சிலருக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டதில் 35 சதவிகிதம் வரை அவர்கள் நோயிலிருந்து மீண்டிருப்பதாக ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.

பக்கவாதம் மற்றும் முடக்கு வாதம் நோய்களிலிருந்து விடுபட சித்த மருத்துவ முறையில் தீர்வு..

Dr. Melwin B.S.M.S.,D.V.M.S

24*7 Support / Appointment:

Free Consultation : +91 94898 32921

Previous ArticleNext Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *